கடலூர் கிழக்கு மாவட்டத்தில் திமுக சார்பில் - நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம் : எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு

கடலூர் கிழக்கு மாவட்டத்தில் திமுக சார்பில் -  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம் :  எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு
Updated on
1 min read

கடலூர் கிழக்கு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு அளிக்கலாம் என்று அமைச்சரும், கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தெரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கை:

நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாந கராட்சி, நகராட்சி, பேரூ ராட்சி உறுப்பினர்கள் ஆகிய பொறுப்புகளுக்கு போட்டியிட விரும்பும் கடலூர் கிழக்கு மாவட்ட திமுகவினர் உரிய விண்ணப்ப படிவத்திற்கு ரூ.10 செலுத்தி அந்தந்த மாநகர, நகர, பேரூர் திமுக அல்லது மாவட்ட திமுக நிர்வாகத்திடம் பெறலாம். போட்டியிட விரும்பும் பொறுப்பு மற்றும் தம்மைப் பற்றிய முழு விபரங்களை விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்து வரும் 25-ம் தேதி மாலை 5 மணிக்குள் மாநகராட்சி உறுப்பினருக்கு ரூ.10ஆயிரம், நகரமன்ற உறுப்பினருக்கு ரூ. 5ஆயிரம், பேரூராட்சி மன்ற உறுப்பினருக்கு ரூ. 2 ஆயிரத்து 500 கட்டணத்தை செலுத்த வேண் டும். ஆதிதிராவிடர் மற்றும் பெண்க ளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டும் போட்டியிடுவோர் மேற் கண்ட கட்டணங்களில் பாதி கட்டணம் செலுத்த வேண்டும். என்று தெரிவித் துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in