வெள்ளக்காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை - அரசின் அலட்சியத்தால் கடலூரில் மக்கள் தவிக்கின்றனர் : முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் குற்றச்சாட்டு

கடலூர் அருகே உச்சிமேடு பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்சி.சம்பத் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பிரெட் வழங்கினார்.
கடலூர் அருகே உச்சிமேடு பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்சி.சம்பத் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பிரெட் வழங்கினார்.
Updated on
1 min read

அரசின் அலட்சியத்தால் கடலூரில் மக்கள் தவிக்கின்றனர் என்று கட லூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்ச ருமான எம்.சி.சம்பத் தெரிவித்தார்.

தென்பெண்ணை ஆற்றில் திடீ ரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பெரிய கங்கணாங் குப்பம், உச்சிமேடு, நாணமேடு, மூல வெளி, குண்டுஉப்பலவாடி, கண்டக்காடு, தாழங்குடா, இரண்டாயிரம் விளாகம். அழகிய நத்தம் ஆகிய பகுதிகளில் பாதிக் கப்பட்ட மக்களையும், விவசாய விளைநிலங்களையும் கடலூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் நேற்று பார்வையிட்டு அந்த பகுதி மக்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை வழங்கி னார்.

பின்பு முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது.

சாத்தனூர் அணை திறக்கப்ப டும் போது கரையோரம் வசிக்கும்மக்கள் பாதுகாப்பான இடங்க ளுக்கு செல்ல வேண்டும் என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்படும்.

இந்த ஆண்டு இவ்வாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப் படவில்லை. இது திமுக அரசின் மக்கள் மீதான அலட்சியத்தை காட்டுகிறது. அரசின் அலட்சி யத்தால் ஏராளமான மக்கள் தங்கள் உடமைகளை இழந்து வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். பகலில் இந்த வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் மிகப்பெரிய உயிரிழப்பு மக்களிடையே ஏற்படவில்லை என்பது ஒரு ஆறுதலான செய்தி. திமுக அரசு இந்த மழை வெள்ளக் காலத்தில் எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. வாழ்வாதாரத்தை இழந்து தவிக் கும் மக்களுக்கு உடனடியாக இந்த அரசு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும். கெடிலம் ஆறு மற்றும் தென்பெண்ணை ஆற்றின் கரைகளை உடனே பலப்படுத்தி வெள்ள நீர் ஊருக்குள் புகுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும்.

தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் 16 ஆயிரத்து 500 ஹெக்டேர் விவசாய பயிர்கள் நீரில் மூழ்கி வீணாகி உள்ளது. மழையால் பாதித்த நெற்பயிருக்கு அரசு அறிவித்த நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றார். மாநில மீனவர் அணி இணை செயலாளர் கே.என். தங்கமணி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் சேவல் ஜி.ஜே.குமார், கடலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கே.காசிநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in