வகுப்புகள் தொடங்கி 20 நாட்களான பிறகும் - இலவச நோட்டுகள் வழங்காததால் பள்ளி மாணவர்கள் தவிப்பு :

வகுப்புகள் தொடங்கி 20 நாட்களான பிறகும் -  இலவச நோட்டுகள் வழங்காததால் பள்ளி மாணவர்கள் தவிப்பு :
Updated on
1 min read

பள்ளிகள் திறந்து 20 நாட்களுக்கு மேலாகியும் இலவச நோட்டுகள் வழங்காததால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் தவிக்கின்றனர்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகம், நோட்டு, சீருடை உள்ளிட்ட 14 வகையான பொருட்கள் வழங்கப்படுகின்றன.

கரோனா பரவலால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில், நவ.1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. ஏற்கெனவே இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. ஆனால், பள்ளிகளைத் திறந்து 20 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை நோட்டுகள் வழங்கவில்லை. இதனால் மாணவர்கள் தவித்து வருகின் றனர்.

இதுகுறித்து அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், ‘இரண்டாம் பருவம் அக்டோ பரிலேயே தொடங்கிவிடும். ஆனால் பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் நவ.1-ம் தேதியில் இருந்து தான் 2-ம் பருவத்துக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. டிசம்பரில் தேர்வு வந்துவிடும். இந்நிலையில் நோட்டுகள் வழங்காததால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர் ’ என்றனர்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘இலவச நோட்டுகள் விரைவில் வழங்கப்படும்,’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in