திண்டுக்கல்லில் - மினி மாரத்தான் போட்டி :

திண்டுக்கல்லில் நடந்த மினிமாரத்தான் போட்டியை கொடியசைத்துத் தொடங்கிவைத்த ஆட்சியர் ச.விசாகன்.
திண்டுக்கல்லில் நடந்த மினிமாரத்தான் போட்டியை கொடியசைத்துத் தொடங்கிவைத்த ஆட்சியர் ச.விசாகன்.
Updated on
1 min read

கரோனா மற்றும் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியை திண்டுக்கல் ரவுண்ட்ரோடு அருகே ஆட்சியர் ச.விசாகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

எஸ்பி சீனிவாசன் முன்னிலை வகித்து மாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடினார். ஆண்களுக்கான போட்டியில் ஒசூரைச் சேர்ந்த மாணவர் நஞ்சுண்டான் முதலிடம் பெற்றார். இவருக்கு ரூ.15,000 மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

பெண்களுக்கான போட்டியில், முதலிடம் வென்ற மதுரையைச் சேர்ந்த மாணவி கவிதாவுக்கு ரூ.1,000 மற்றும் பதக்கம் வழங்கப் பட்டது.

பரிசளிப்பு நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ் பாத்திமாமேரி, மேற்கு ரோட்டரி சங்க தலைவர் சண்முகம், ஜி.டி.என். கல்லூரி தாளாளர் ரெத்தினம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in