ஒக்கூரில் இலங்கை தமிழர்களுக்கு இலவச எரிவாயு அடுப்பு வழங்கிய அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்.
ஒக்கூரில் இலங்கை தமிழர்களுக்கு இலவச எரிவாயு அடுப்பு வழங்கிய அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்.

சிவகங்கை மாவட்டத்தில் - 205 இலங்கை தமிழர்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு : அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தகவல்

Published on

சிவகங்கை மாவட்டத்தில் 205 இலங்கை தமிழர்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

திருப்பத்தூர் அருகே காரையூர், சிவகங்கை அருகே ஒக்கூர் ஆகிய இடங்களில் உள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி தலைமை வகித்தார். நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசியதாவது: மாவட்டத்தில் காரையூர், ஒக்கூர், மூங்கில் ஊரணி, தாயமங்கலம், தாழையூர், சென்னாலக்குடி ஆகிய 6 முகாம்களில் வசிக்கும் 1,009 குடும்பங்களுக்கு கோ-ஆப்டெக்ஸ் மூலம் ரூ.10 லட்சம் மதிப்பில் இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படுகின்றன.

205 குடும்பங்களுக்கு இலவச இணைப்பு வழங்கப்படுகிறது என்று பேசினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், ஐஓசி நிறுவன மண்டல மேலாளர் பிரேமா, தனி வட்டாட்சியர் மகாதேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in