தென்காசியில் பரத நாட்டியப் போட்டி  :

தென்காசியில் பரத நாட்டியப் போட்டி :

Published on

பள்ளிக்கல்வித்துறை, தென்காசி வ.உ.சி. வட்டார நூலகம், ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் சக்தி, ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் எலைட் சார்பில் தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு பரதநாட்டியப் போட்டி மற்றும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு  பரமகல்யாணி மேல்நிலைப்பள்ளி செயலாளர் சுந்தரம் தலைமை வகித்தார். சேகர், எழுத்தாளர் மு.க.மதியழகன், வாசகர் வட்ட துணைத் தலைவர் அருணாச்சலம், எம்.கே.ஆர்.மைதீன், நகர திமுக செயலாளர் சாதிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார நூலகர் பிரமநாயகம் வரவேற்றார்.

பேரழகி கன்னட்ராணி நூலை தென்காசி தொகுதி எம்பி தனுஷ்.எம்.குமார் வெளியிட வழக்கறிஞர் கனகசபாபதி, பேராசிரியர் விஜயலெட்சுமி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

விழாவில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன், மெரிட் கல்விக் குழுமத் தலைவர் சுப்பிரமணியன், பிரில்லியண்ட் பள்ளி செயலாளர் பாரதிகண்ணன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in