Published : 21 Nov 2021 03:07 AM
Last Updated : 21 Nov 2021 03:07 AM

மழை வெள்ளத்துக்கு இடையே மல்லுக்கட்டும் அமைச்சர்கள் : திண்டாடும் கள்ளக்குறிச்சி ஆட்சியர்

கனமழையால், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. வடிகால்களைத் தூர் வாராததால் வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளிலும், விளை நிலப் பகுதிகளிலும் தஞ்சம் அடைந்துள்ளது. ஆட்சியர்பி.என்.தர் நேரில் பார்வையிட்டு, துறைவாரியாக உரிய பணிகளுக்கு உத்தரவிட்டு வருகிறார்.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தொகுதிக்குட்பட்ட தீபமங்கலம் கிராமத்தில் நிவாரண உதவி அளிக்க தொகுதியின் எம்எல்ஏவும், உயர்கல்வித் துறை அமைச்சருமான க.பொன் முடி நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு வருகை தந்தார். மாவட்ட ஆட்சியரும் அமைச்சருடன் அங்கு சென்று, நடைபெறும் பணிகளை அமைச்சரிடம் விளக்கியுள்ளார்.

இதனிடையே கள்ளக்குறிச்சி மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குழுத் தலைவரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான எ.வ.வேலு, சங்க ராபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் தா.உதயசூரியன், ரிஷிவந்தியம் சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திக்கேயன் உள்ளிட்டோர் சங்கராபுரம் தொகுதிக்குட்பட்ட சித்தப்பட் டிணம், கடம்பூர், ஏந்தல், சாத்தப்பூர்மற்றும் மண்டபம் ஆகிய பகுதிகளில் அதே நாள் காலை 11 மணிக்குஆய்வுக்கு வந்தனர். இதையறிந்தஆட்சியர், அமைச்சர் பொன் முடியிடம் விளக்கமளித்துவிட்டு, அங்கிருந்து அவசரமாக புறப்பட்டு சங்கராபுரம் சென்றார். அங்கு நடக்கும் பணிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு கேட்டறிந்தார்.

இப்படி ஒரே நாளில் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் இங்கும் அங்கும் அலைக்கழிக்கப்பட்டதை மாவட்ட நிர்வாகத்தில் உள்ள ஊழியர்கள் குறிப்பிட்டு தங்கள் ஆதங்கத்தை தெரிவிக்கின்றனர்.

“அமைச்சர்களின் கோஷ்டி பூசலுக்கு இடையே சிக்கி சின்னா பின்னமாவது நாங்கள் தான். இருஅமைச்சர்களும் அல்லாட விடுகின்றனர். ஆட்சியரின் பாடு தான் படுதிண்டாட்டம். இருவர் அழைத்த நேரத் துக்கும் சரியாக செல்லவேண்டிய நிர்ப்பந்தம். நிவாரணப்பணிகளில் ஏதேனும் குறை ஏற்பட் டால் இருவரின் அதிருப்திக்கும் ஆளாக நேரிடுகிறது” என்று தெரி வித்தனர்.

இதுபற்றி திமுக நிர்வாகி ஒருவர்கூறுகையில், “கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிக ளில் 4 திமுக உறுப்பினர்கள் உள்ளனர், அவர்களில் ஒருவரான க.பொன்முடி அமைச்சர் என்ற போதிலும்,மாவட்டத்தில் உள்ள மற்ற திமுக எம்எல்ஏ-க்களுக்கு இடையே நில வும் கருத்து வேறுபாடு காரணமாக, ‘கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தலையிட வேண்டாம்’ என கட்சித் தலைமை அறிவுறுத்தியிருக்கிறது. இதனால் அவர், திருக்கோவிலூர் தொகுதியைத் தாண்டி வருவ தில்லை.

அமைச்சர் எ.வ.வேலு கள்ளக் குறிச்சி மாவட்ட வளர்ச்சிப் பணிகள்குழுத் தலைவராக நியமிக்கப்பட் டுள்ளார். தனது தந்தையை கள்ளக்குறிச்சி மாவட்ட எம்எல்ஏ-க்கள்மதிப்பதில்லை என்ற காரணத்தினால் கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினரான கவுதம சிகாமணி யும், தற்போது மாவட்டத்தில் ஏற்பட்ட மழைவெள்ள சேத பாதிப் புகளை இதுவரை பார்வையிட கூட வரவில்லை. மாறாக கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சேலம் மாவட்ட தொகுதிகளில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x