

காங்கயம் காவல் நிலையத்தில் கோவை சரக டிஐஜி எம்.எஸ்.முத்துசாமி நேற்று ஆய்வு மேற்கொண்டார். காவல்நிலையத்தில் பராமரிக்கப்பட்டுவரும் ஆவணங்கள், பதிவேடுகள்மற்றும் குற்ற வழக்கு கோப்புகளை ஆய்வு செய்து, நிலுவையில் உள்ள நீண்டகால வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
மேலும், இரவு ரோந்துகளை முறையாக செய்து குற்றங்களை தடுப்பதுடன், புகார்தாரர் மனு விசாரணையை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். புகார்தாரர்களிடம் கனிவுடன் நடந்துகொள்ளவேண்டும் என்றும் அறிவுறுத்தினார். பின்னர் போலீஸாரின் குறைகளை கேட்டறிந்தார்.
அதைத்தொடர்ந்து ஊதியூர் காவல் நிலையத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, காங்கயம் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெ.குமரேசன், ஆய்வாளர் டி.ஜெயக்குமார், உதவி ஆய்வாளர் கே.சண்முகம் உட்பட போலீஸார் உடனிருந்தனர்.