Published : 19 Nov 2021 03:08 AM
Last Updated : 19 Nov 2021 03:08 AM
ஜம்புக்கல் மலையில் சட்ட விரோத ஆவணங்களை ரத்து செய்ய வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.
இதுதொடர்பாக உடுமலை கோட்டாட்சியரிடம், ஜம்புக்கல் மலை விவசாயிகள் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
உடுமலை வட்டம் ஆண்டியக்கவுண்டனுார் மற்றும் கல்லாபுரம் கிராமங்களில், ஜம்புக்கல் மலைத்தொடர் அமைந்துள்ளது. வருவாய்த்துறை வசம், 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள, இந்த மலையில், சமதளப்பரப்பில், ஏழைகள், பட்டியலின மக்கள் பயன்பெறும் வகையில், 1970-ம் ஆண்டில், அரசு சார்பில், விவசாயம் செய்து கொள்ள ‘கண்டிஷன் பட்டா’ வழங்கப்பட்டது. நிபந்தனை அடிப்படையில் அரசு வழங்கிய, பட்டாவை, சட்ட விரோதமாக சிலர் விலைக்கு வாங்கியுள்ளதாகவும், யாரும் மலைப்பகுதிக்குள் நுழையக் கூடாது என எச்சரித்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
கண்டிஷன் பட்டா நிலங்களை விற்பனை செய்ய தடை உள்ள நிலையில், சட்டத்துக்கு புறம்பாக நில ஆவணம் விற்பனை பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக மேற்கொள்ளப்பட்ட ஆவணங்களை ரத்து செய்து, தனி நபர் ஆக்கிரமிப்புகளை அகற்றி, சுற்றுப்புறத்திலுள்ள 18 கிராம மக்களின் பாரம்பரிய உரிமைகளை காக்க வேண்டும். ஏழை மக்களுக்கு வீட்டுமனை பட்டா, விவசாய நிலப்பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT