Published : 19 Nov 2021 03:09 AM
Last Updated : 19 Nov 2021 03:09 AM

தி சென்னை சில்க்ஸ் சார்பில் ‘கண்மணி’ பட்டுப் புடவை ரகம் அறிமுகம் :

சென்னை

‘கண்மணி’ என்ற பெயரில் புதிய பட்டுப் புடவை ரகத்தை தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

எழில் மிகுந்த மற்றும் இதுவரை இல்லாத வண்ணங்களில் ‘கண்மணி’ பட்டுப் புடவைகள், பட்டுப் பாவாடைகள் உயர்தரமானதாகவும், பாரம்பரிய முறையிலும் நெய்யப்பட்டுள்ளன. இதில் 2 ப்ளவுஸுடன் சிறப்பு பட்டுப் புடவை மற்றும் டிவைன் கலெக்சன் ஆகியவை கிடைக்கும்.50 ஆண்டு பாரம்பரிய பட்டு நெசவு வரலாறு இருப்பதால், எங்களால் மொத்த ஆர்டர்களை தயாரிக்க முடியும். அவை சுருக்கம் இன்மை, ஒவ்வாமை, ஆன்டிவைரல், நீடித்த உழைப்பு, சாயம் போகா தன்மை ஆகியவற்றால் மக்களிடையே பெரும் மதிப்பை பெற்றுள்ளன. வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்பவும் வடிவமைத்து தரப்படும். எங்களின் பிரத்தியேக ஆடை வடிவமைப்பாளர்களை தொடர்பு கொண்டு ஆடைகளை வடிவமைத்துக் கொள்ளலாம்.

சிறந்த எம்பிராய்டரி, நேர்த்தியான துணி ரகங்கள், புதிய பேட்டர்ன்கள் எங்களிடம் உள்ளன. வாடிக்கையாளர்களின் பழைய துணி ரகங்களை புதுப்பித்து எழிலூட்டி தரப்படும். விவரங்களுக்கு 91 99948 11711 என்ற தொலைபேசி எண்ணையோ, https://www.thechennaisilks.com/kanmanie.html இணையதளத்தையோ அணுகலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x