

பாங்க் ஆப் பரோடா வங்கியின் புதுச்சேரி பிராந்தியம் சார்பில் வீட்டுக்கடனுக்கான சிறப்பு கண் காட்சி நாளை மற்றும் நாளை மறு தினம் (நவ. 20 , 21) புதுச்சேரி ஜெயராம் திருமண நிலையத்தில் நடைபெறுகிறது.
இது குறித்து வங்கியின் புதுச் சேரி பிராந்தியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பாங்க் ஆப் பரோடா வங்கி முன்னணி பில்டர்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்களுடன் இணைந்து ‘பிராப்பர்ட்டி எக்ஸ்போ2021’ என்ற பெயரில் வீட்டுக் கடனுக்கான சிறப்பு கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.
வங்கியின் வீட்டு வசதி திட்டம் அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது. தனி வீடு, அடுக்குமாடி குடியிருப்பு வாங்குவோர், சொந்தமாக வீடு கட்டுவோர், வீடுகளை புதுப்பிக்க விரும்புவோர் என அனைவரின் தேவைக்கேற்ப மிக குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.
அது மட்டுமன்றி, ஏற்கெனவே அதிக வட்டி விகிதத்தில் வேறு நிறுவனங்களில் வீட்டுக் கடன் வாங்கியுள்ளோர், பரோடாவங்கிக்கு கடனை மாற்றிக் கொள்ளும் வசதியும் செய்யப் பட்டுள்ளது. மேலும் அதே இஎம்ஐ-க்குள் ‘டாப் அப்’ செய்து கொள்ளலாம்.
வங்கியின் அலுவலர்கள் உடனுக்குடன் கடன் அனுமதி கடிதம் வழங்கவும் தயார் நிலையில் இருப்பார்கள். எனவே புதிதாக கடன் வாங்க இருப்பவர்களும், கடனை வேறு நிறுவனங்களில் இருந்து மாற்ற விரும்புவோரும் இந்த வாய்ப்பை பயன் படுத்தி பலன் பெறலாம்.
இவ்வாறு வங்கித் தரப்பில் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.