

கப்பலோட்டிய தமிழன் என, அழைக்கப்படும், வஉ சிதம்பரனாரின் 85-வது நினைவு நாளையொட்டி மதுரை சிம்மக்கல்லிலுள்ள அவரது சிலைக்கு பாஜக மாநகர் மாவட்ட தலைவர் மருத்துவர் சரவணன் தலைமையில் அரசு தொடர்பு பிரிவு தலைவர் ராஜரெத்தினம் உள்ளிட்ட அக்கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
மேலும், தமிழ்நாடு அப்பளம், வடகம், மோர் வத்தல் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் திருமுருகன் உள்பட பல்வேறு அமைப்பினரும் சிலைக்கு மாலை அணிவித்தனர்.