

சிமென்ட், கம்பி, ஜல்லி உட்பட கட்டுமானப் பொருட்கள் விலைஏற்றத்தால் தமிழகத்தில் கட்டுமானத் தொழில் முடங்கி பொறியாளர்கள், தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழக்கும் சூழல் உள்ளது.எனவே, அரசு கட்டுமான பொருட்களின் விலை உயர்வை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் எனவலியுறுத்தியும், கட்டுமானப் பொருட்களுக்கான ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கக்கோரியும் கன்னியாகுமரி மாவட்ட பதிவு பெற்ற பொறியாளர் சங்கம் சார்பில்ஆட்சியர் அலுவலகம் முன்புநேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் பிரேம்குமார் தலைமை வகித்தார். நிறுவனத் தலைவர் சிறில் கிறிஸ்துராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். நிர்வாகிகள் அலெக்ஸ், ரஜீஷ்குமார், ஜெய பால், பால்டுவின் புரூஸ் உட்பட பலர் கலந்துகொண்டு, கட்டுமானப் பொருட்களின் விலையை குறைக்கக்கோரி கோஷம் எழுப்பினர்.