Published : 19 Nov 2021 03:10 AM
Last Updated : 19 Nov 2021 03:10 AM

குமரியில் வாக்காளர் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் :

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.

வரும் 2022 ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியானவர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கம் மற்றும் முகவரி மாற்றம் தொடர்பாக வரும் 30-ம் தேதி வரை படிவங்கள் 6, 7, 8, 8ஏ ஆகியவற்றை பூர்த்தி செய்து வழங்கலாம்.

மேலும், தங்கள் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் வரும் 20, 21 ஆகிய இரு தினங்கள் கூடுதல் சிறப்பு முகாம்களும், 27 மற்றும் 28-ம் தேதிகளில்சிறப்பு முகாம்களும் நடைபெறவுள்ளதால் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்டஆட்சியர் மா.அரவிந்த் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x