Published : 18 Nov 2021 03:08 AM
Last Updated : 18 Nov 2021 03:08 AM

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் - 4,875 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன : வேளாண் அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் தகவல்

வடகிழக்கு பருவமழையால் கடலூர் மாவட்ட த்தில் 4,875 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள் ளதாக அமைச்சர் எம்ஆர்கே.பன் னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்துவேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன் னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகி யோர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் முன்னிலையில் பல்வேறு துறைஅலுவலர்களுடன் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் 56 பயனாளிகளுக்கு ரூ. 84 லட்சத்து 62 ஆயிரத்து 25 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச் சர்கள் வழங்கினர்.

மேலும் ஊரக புத்தாக்கத் திட்டத்தின் மூலம் குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரங்கமங்கலம் ஊராட்சி மணிலாஉற்பத்தியாளர் குழு மற்றும் அண்ணாகிராம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பனப்பாக்கம் ஊராட்சி கொய்யா உற்பத்தியாளர் குழுவிற்கு திட்ட தொடக்க நிதியாக தலா ரூ. 75 ஆயிரத்திற்கான காசோலைகளை வழங்கினர்.

அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேல் கவரப்பட்டு ஊராட்சியைச் சேர்ந்த ஒரு பயனாளிக்கு போட்டோ ஸ்டியோ வைப்பதற்காக ரூ.3 லட்சத்திற்கான வங்கிக் கடன் காசோலையை வழங்கினர்.

தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம் திட்டத்தின் சார்பில் 11 விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

மேலும் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் மூலம்2 விவசாயிகளுக்கு மானிய விலை யில் தார்பாய்கள் வழங்கப்பட்டன.

பின்னர் அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் செய்தியாளர் களிடம் கூறுகையில், "வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முதல்வர் முன்னெச்சரிக்கையாக அனைத்து மாவட்ட ஆட்சியர்க ளுடன் காணொலி காட்சி மூலம் தொடர்பு கொண்டு துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளவும், மாவட்டங்களுக்கு பொறுப்பு அதிகாரி களை நியமித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டதன் வித மாக பாதிப்புகள் குறைந்துள்ளன.

கடலூர் மாவட்டத்தில் 1 லட்சம் 62 ஆயிரம் ஏக்கரில் சம்பா பயிரிடப்பட்டதில் 4,875 ஏக்கர் மழைநீரில் மூழ்கியுள்ளது. இதில் 2,845 ஏக்கர் 33 சதவீதத்திற்கு மேல்பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் மாநி லம் முழுவதும் 43 லட்சத்து 65 ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் 1 லட்சத்து 58 ஆயிரத்து 572 ஏக்கர் நீரில் மூழ்கி உள்ளன. இதில் 1 லட்த்து 43 ஆயிரத்து 860 ஏக்கர் 33 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளன.

உரங்கள் தட்டுபாடின்றி கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேவையான அளவு உரங்கள் கையிருப்பு உள்ளது என்றார்.

கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) ரஞ்ஜித்சிங், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் திட்ட இயக்குநப் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x