Regional02
திருமண விழாவில் நகை, பணம் திருட்டு :
புதுச்சேரி மாநிலம், சேதராப் பட்டு பகுதியைச் சேர்ந்தவர் நாகமுத்து மகன் செல்வக்குமார்(39). இவரது தம்பி மணிமா றன் என்பவருக்கு கடந்த திங்கள் கிழமை திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று முன் தினம் இரவு திருச்சிற்றம்பலம் கூட்டு சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் திருமண வர வேற்பு விழா நடைபெற்றது.
அப்போது, உறவினர்களிடம் இருந்து அன்பளிப்பு (மொய்) பணம் மற்றும் நகைகள் பெறப் பட்டன. இந்தப் பணம் மற்றும் நகைகளை ஒரு பையில் போட்டுசெல்வக்குமார் வைத்திருந்தார். அந்தப் பையை கீழே வைத்து விட்டு, செல்வக்குமார், புகைப் படம் எடுத்துக் கொண்டார். திடீரென பணப்பையை காணவில்லை. இதுபற்றி செல்வக்குமார் அளித்த புகாரின் பேரில்ஆரோவில் காவல் நிலையத் தினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
