Published : 17 Nov 2021 03:07 AM
Last Updated : 17 Nov 2021 03:07 AM

சேலம் மாவட்டத்தில் இன்று தொடங்கி 19-ம் தேதி வரை - அமைச்சர் தலைமையில் சிறப்பு குறைதீர் முகாம் :

சேலம் மாவட்டத்தில் இன்று (17-ம் தேதி) தொடங்கி வரும் 19-ம் தேதி வரை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் மக்கள் குறைதீர் சிறப்பு முகாம் நடக்கவுள்ளது.

இதுதொடர்பாக சேலம் ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு , சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் வட்டங்கள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம்கள் நடத்தி பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்று தீர்வு காண உள்ளார். முகாம் இன்று காலை 9 மணிக்கு தலைவாசல் வட்டாட்சியர் அலுவலகத்திலும், காலை 10 மணிக்கும் ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும், காலை 11 மணிக்கு கெங்கவல்லி வட்டாட்சியர் அலுவலகத்திலும், மதியம் 3 மணிக்கும் பெத்தநாயக்கன்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், மாலை 4 மணிக்கு வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திலும், மாலை 5 மணிக்கு மணியனூரில் உள்ள சேலம் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்திலும் நடைபெறவுள்ளன.

நாளை (18-ம் தேதி) காலை ஓமலூர், காடையாம்பட்டி, மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி வட்டத்துக்கு அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறுகிறது. வரும் 19-ம் தேதி சூரமங்கலம் மண்டலம் மற்றும் சேலம் மேற்கு வட்டங்களுக்கு சேலம் காசக்காரனூரில் உள்ள சோனா தொழில்நுட்பக் கல்லூரியிலும், அஸ்தம்பட்டி மண்டலத்துக்கு சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியிலும், அம்மாப்பேட்டை மண்டலத்துக்கு அம்மாப்பேட்டை  சக்தி கைலாஷ் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், கொண்டலாம்பட்டி மண்டலத்துக்கு கொண்டலாம்பட்டி சவுடேஸ்வரி கல்லூரியிலும் நடைபெறவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x