ராட்சத பாறை உருண்டு தாய், மகள் உயிரிழந்த சம்பவத்தில் - வேலூரில் மலைப்பகுதி ஆக்கிரமிப்பு வீடுகள் கணக்கெடுப்பு : மாற்று இடம் வழங்க வருவாய் துறையினர் நடவடிக்கை

வேலூர் காகிதப்பட்டரை பகுதி மலையடிவார குடியிருப்பில் வசிப்பவர்கள் குறித்து கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட வருவாய் துறையினர்.
வேலூர் காகிதப்பட்டரை பகுதி மலையடிவார குடியிருப்பில் வசிப்பவர்கள் குறித்து கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட வருவாய் துறையினர்.
Updated on
1 min read

வேலூரில் ராட்சத பாறை உருண்டு இடிபாடுகளில் சிக்கி தாய், மகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு வீடுகள் குறித்த கணக் கெடுப்பில் வருவாய்த் துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் வேலூர் காகிதபட்டரை ‘டான்சி’ தொழிற்சாலைக்கு பின்புறம் உள்ள மலைப் பகுதியில் ராட்சத பாறை உருண்டு பிச்சாண்டி என்பவர் வசித்து வரும் வீட்டின் மீது விழுந்தது. இதில், வீட்டில் இருந்த பிச்சாண்டியின் மனைவி ரமணி, மகள் நிஷாந்தி ஆகியோர் சிக்கிக் கொண்டனர்.

நீண்ட போராட்டத்துக்குப் பிறகு மீட்கப்பட்ட ரமணியை மருத்துவ மனையில் அனுமதித்தபோது அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது. வீட்டின் இடிபாடுகளில் சிக்கிய நிஷாந்தினியை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபடுத்தப்பட் டனர். சுமார் 9 மணி நேரம் போராட்டத்துக்குப் பிறகு நிஷாந்தியும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். ராட்சத பாறை உருண்டு விழுந்ததில் தாய், மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஆக்கிரமிப்பு வீடுகள்

இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்த போது, ‘‘பாறை உருண்டு வீடு சேதமடைந்த பகுதி வருவாய்த்துறை புறம்போக்கு இடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது’’ என தெரிவித்தனர்.

ஆனால், வருவாய்த்துறையினர் கையூட்டு பெற்றுக்கொண்டு வீடுகட்டிக்கொள்ள அனுமதி அளிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வருவாய்த்துறைக்கு சொந்தமான இடத்தில் வசிக்கும் பொதுமக்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

வருவாய்த்துறை விளக்கம்

இதில், ஆக்கிரமிப்பு பகுதியில் வசிப்பவர்களை அப்புறப் படுத்தவும் அவர்களுக்கு மாற்று இடம் வழங்கவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான நடவடிக்கையை நாங்கள் தொடங்கியுள்ளோம்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in