அகரமேல் ஊராட்சியில் விளையாட்டுத் திடலாக : மாற்றப்பட்ட குளத்தை மீட்கக் கோரிக்கை :

அகரமேல் ஊராட்சியில் விளையாட்டுத் திடலாக : மாற்றப்பட்ட குளத்தை மீட்கக் கோரிக்கை :
Updated on
1 min read

பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது அகரமேல் ஊராட்சியில் உள்ள 2 குளங்களில் ஒன்று மூக்குத்திக்குட்டை. சுமார் அரை ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளம் நிலத்தடி நீர் மட்டத்தையும் அதிகரிக்க உதவியது.

இந்த குளத்தை சுற்றியுள்ள 20 ஏக்கர் நிலத்தை வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்ய தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. அத்திட்டத்துக்கு இடையூறாக இருக்கும் என்பதால், கடந்த 6 மாதங்களுக்கு முன்புசிலர், குளத்தை சவுடு மண்ணால் மூடிவிட்டனர்.

இதற்கு பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், ஊராட்சி நிர்வாகம், கடந்த20 நாட்களுக்கு முன்பு மூடப்பட்ட குளத்தைச் சுற்றி சிமென்ட் கம்பங்கள் அமைத்து, 'அம்மா இளைஞர் விளையாட்டு மைதானம்’ அமைக்கப்பட்டுள்ளதாக பெயர் பதாகையை வைத்துள்ளது. இந்த குளத்தை மீட்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக பூந்தமல்லி வட்டாட்சியர் சங்கர் கூறும்போது, "மூக்குத்திக்குட்டை மூடப்பட்டது தொடர்பாக விரிவான அறிக்கையை தயாரித்து வருகிறோம். அதை மாவட்ட நிர்வாகத்திடம் அளித்து உரிய தீர்வு காணப்படும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in