குயின் மீரா பள்ளியில் மாணவர் கீதம் வெளியீடு :

மதுரை குயின்மீரா சர்வதேச பள்ளியில் மாணவர் கீதத்தை வெளியிட்ட திரைப்பட பாடலாசிரியர் மதன்கார்க்கி உள்ளிட்டோர்.
மதுரை குயின்மீரா சர்வதேச பள்ளியில் மாணவர் கீதத்தை வெளியிட்ட திரைப்பட பாடலாசிரியர் மதன்கார்க்கி உள்ளிட்டோர்.
Updated on
1 min read

மதுரை குயின் மீரா சர்வதேச பள்ளியில் மாணவர் கீதம் வெளி யிடப்பட்டது.

கோச்சடை குயின்மீரா சர்வ தேச பள்ளி சார்பில், ‘மாணவர் கீதம்’ தயாரிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் தினத்தில் பள்ளி தலைவர் டாக்டர் சி.சந்திரன், நிர்வாக இயக்குநர் அபிநாத் சந்திரன், கல்வி இயக்குநர் சுஜாதா குப்தன், திரைப்பட பாடலாசிரியர் மதன்கார்க்கி, இசையமைப்பாளர் அனில் சீனிவாசன் ஆகியோர் இணைந்து மாணவர் கீதத்தை வெளியிட்டனர். மாணவர் கீதத்தை மதன்கார்க்கி எழுதியுள்ளார். பாடகி உத்தாரா பாடியுள்ளார். அனில் சீனிவாசன் இசையமைத்துள்ளார்.

மதன்கார்க்கி பேசுகையில், மாணவர் கீதத்தின் பாடல் வரிகள் குழந்தைகளுக்காக எழுதப்பட்டுள்ளது என்றார். அபிநாத் சந்திரன் பேசுகையில், மாணவர்கள் தங்கள் கடமைகளை உணரவே இந்த கீதம் உருவாக்கப் பட்டுள்ளது என்றார்.

சி.சந்திரன், எதிர்காலத் தூண்களான மாணவர்கள் மீது, உலகம் வைத்திருக்கும் நம்பிக்கையை மாணவர் கீதம் பிரதிபலிக்கிறது என்றார். துணை நிர்வாக இயக்குநர் ஜோஸ்பின் அன்னி ஷிபா அருள்தாஸ் நன்றி கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in