

கடந்த சில வாரங்களாக பெய்து வரும் பருவ மழை காரணமாக பாலமேடு அருகேயுள்ள சாத்தியார் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் படிப்படியாக சாத்தியார் அணையின் நீர்மட்டம் உயர்ந்து, நேற்று முழுக் கொள்ளளவான 29 அடியை எட்டியது. இதனால் உபரி நீர் மறுகால் வழியாக வழிந்து வெளி யேறுகிறது.
அணையின் மூலம் பாசன வசதி பெறும் 11 கண் மாய்களுக்கு தண்ணீரை பகிர்ந் தளிப்பது தொடர்பாக பொதுப் பணித் துறையினர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். அணை நிரம்பியதால் மகிழ்ச்சி அடைந்துள்ள விவசாயிகள், விரைவில் தண்ணீரை பாசனத் துக்காக திறக்க அரசை வலியுறுத்த உள்ளனர்.