Published : 16 Nov 2021 03:10 AM
Last Updated : 16 Nov 2021 03:10 AM

கார்த்திகை தீபத் திருவிழாவின் 6-ம் நாளில் - அண்ணாமலையார் கோயிலில் நால்வர் உற்சவம் :

சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய நால்வர் உற்சவம்.

திருவண்ணாமலை

தி.மலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி ‘நால்வர் உற்சவம் நேற்று நடைபெற்றது.

தி.மலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் தீபத் திருவிழா, காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த 7-ம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. மூலவர் சன்னதி முன்புள்ள தங்கக் கொடி மரத்தில், கடந்த 10-ம் தேதி காலை கொடியேற்றம் நடைபெற்ற பிறகு, பஞ்சமூர்த்திகளின் 10 நாள் உற்சவம் ஆரம்பமானது.

இதில் 6-ம் நாள் உற்சவம் நேற்று நடைபெற்றது. விநாயகர், சந்திரசேகரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் நேற்று காலை எழுந்தருளி, கோயிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் பவனி வந்தனர். இதேபோல், ‘நால்வர்’ என போற்றப்படும் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரும், 5-ம் பிரகாரத்தில் பவனி வந்து அருள்பாலித்தனர். இதைத்தொடர்ந்து, பஞ்சமூர்த்தி களின் உற்சவம் நேற்று இரவு நடைபெற்றது. முன்னதாக மூலவர்,அம்மன் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

தீபத் திருவிழா தொடங்கிய 7-ம் தேதியில் இருந்து, ஆன்லைனில் பதிவு செய்த வெளியூர் மற்றும் வெளிமாவட்ட பக்தர்கள், அனுமதி சீட்டு பெற்ற உள்ளூர் பக்தர்கள் ஆகியோர், அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தனர். அவர்களுக்கான அனுமதி நாளை (17-ம் தேதி) காலையுடன் முடிவுக்கு வருகிறது.

பின்னர், 17-ம் தேதி பிற்பகலில் இருந்து 20-ம் தேதி வரை சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. இதையடுத்து 21-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை ஆன்லைனில் பதிவு செய்த பக்தர்கள், தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். நவம்பர் 24-ம் தேதி முதல் வழக்க மான நடைமுறையில் தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிப்பட உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x