

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரியில் 2021-22 கல்வி ஆண்டிற்கான இளநிலைப் பாடப்பிரிவுகளுக்கான மாண வர் சேர்க்கை இறுதிகட்ட கலந்தாய்வு ஏற்கெனவே முடிவடைந்தது. இந்நிலையில் பிஎஸ்சி மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடர் மழை காரணமாக தள்ளி வைக்கப் பட்டது. நேற்று இம்மாணவர்களுக்கான கலந்தாய்வில் மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்களை தேர்வு செய்தனர்.