Published : 14 Nov 2021 03:08 AM
Last Updated : 14 Nov 2021 03:08 AM

கலசப்பாக்கம் ஒன்றிய குழு கூட்டம் :

கலசப்பாக்கம் ஒன்றிய குழு கூட்டத்தில் பேசும் ஒன்றிய குழுத் தலைவர் அன்பரசி ராஜசேகரன்.

திருவண்ணாமலை

கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழு கூட்டம் நடைபெற்றது.

தலைவர் அன்பரசி ராஜசேகரன் தலைமை வகித்தார். கூட்டத்தில், “கீழ்பொத்தரை – தென்பள்ளிபட்டு, கோயில் மாதிமங்கலம் – கீழ்தாமரைப்பாக்கம், பில்லூர் – பொண்ணாந்தாங்கள், சிறுவள்ளூர் – மேல்சிறுவள்ளூர், கேட்டவரம்பாளையம் – ஓம்முடி இடையே உள்ள 5 கிராம சாலைகளை மேம்படுத்த நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைப்பது, 45 ஊராட்சிகளில் உள்ள பள்ளிகளை சீரமைப்பது” உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், துணைத் தலைவர் பால சுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லட்சுமி, எழிலரசு உட்பட பலர் கலந்துகொண்டனர். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x