கீழே விழும் நிலையில் இருந்த மரங்களை வெட்டி அகற்றிய நெடுஞ்சாலைத் துறையினர் :

கீழே விழும் நிலையில் இருந்த  மரங்களை வெட்டி அகற்றிய நெடுஞ்சாலைத் துறையினர் :
Updated on
1 min read

இருப்பினும், அசம்பாவிதம் நிகழாமல் இருக்க, மாநில நெடுஞ்சாலையோரம் ஆபத்தான நிலையில் காணப்படும் மரங்களை வெட்டி அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் முடிவு செய்தனர். அதன்படி, முழுமையாக வெட்ட வேண்டிய மரம், கிளைகளை வெட்ட வேண்டிய மரங்கள் குறித்து கணக்கெடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக, கோவை கோட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கூறும்போது,‘‘மாவட்டத்தில் தற்போது வரை கீழே விழும் நிலையில் இருந்த 7 மரங்கள் வேருடன் வெட்டி அகற்றப்பட்டுள்ளன. மேலும், 2 மரங்களின் கிளைகள் மட்டும் வெட்டி அகற்றப்பட்டன. பழுதடைந்த மரங்கள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறோம். பொதுமக்களும் கீழே விழும் நிலையில் உள்ள மரங்களை கண்டறிந்தால், புகைப்படம் எடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in