Regional02
கோபியில் மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழப்பு :
கோபியில் மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழந்தார்.
கோபி வாய்க்கால்சாலை பகுதியைச் சேர்ந்தவர் தீனதயாளன். தனியார் நூற்பாலை தொழிலாளி. இவருடைய மனைவி திலகவதி (38). நேற்று முன்தினம் மாலை, நிலத்தடியில் உள்ள தொட்டியில் உள்ள தண்ணீர் குழாயை அடைப்பதற்காக சென்றபோது, திலகவதி தவறி தண்ணீர் தொட்டியில் விழுந்தார்.
மின் மோட்டாரில் ஏற்பட்ட மின்கசிவால், தொட்டியில் உள்ள நீரில் மின்சாரம் பாய்ந்த நிலையில், திலகவதியை மின்சாரம் தாக்கியது. அருகில் இருந்தோர் மின் இணைப்பை துண்டித்து, அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். கோபி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
