

கடலூர் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணின் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு:
ஆண்டுதோறும் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் 18 வயதுமுதல் 45 வயது வரையும்,கடுமையான மனவளர்ச்சி குறையுடைய (75சதவீதத்துக்கும் மேற் பட்ட) மாற்றுத்திறனாளிகளின் தாய்மார்கள் தையல் பயிற்சி பெற்றிருப்பின் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் பெற மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர், அறை எண்.112, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், புதிய மாவட்ட ஆட்சியர் வளாகம்,கடலூர் என்ற முகவரிக்கு அஞ்சல் வழியாகவோ அல்லது நேரிலோ வரும் 26-ம் தேதிக்குள் விண்ணப்பிக் கலாம்.