திண்டுக்கல் மாநகராட்சியில் - கடை ஏலத்தில் முறைகேடு நடப்பதாக அதிமுகவினர் புகார் :

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் அலுவலக அறையில் புகார் தெரிவித்த அதிமுகவினர்.
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் அலுவலக அறையில் புகார் தெரிவித்த அதிமுகவினர்.
Updated on
1 min read

திண்டுக்கல் மாநகராட்சி காந்தி மார்க்கெட்டில் கடைகள் ஏலம் விடுவதில் முறைகேடு நடப்பதாகக் கூறி, மாநகராட்சி ஆணையாளருடன் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாநகராட்சிக் குட்பட்ட காந்தி மார்க்கெட் கடைகள் புதுப்பிக்கப்பட்டு கடந்த தேர்தலுக்கு முன்பு திறக்கப்பட்டது. தேர்தல் அறிவிக்கப்பட்டதால் கடைகளை ஏலம் விட முடியவில்லை. இதையடுத்து தற்போது ஏல அறிவிப்பை மாநகராட்சி வெளியிட்டது.

இதில் ஆளுங்கட்சியினருக்கு சாதகமாக மாநகராட்சி அலுவலர் கள் நடந்துகொள்வதாக அதிமுக வினர் குற்றம்சாட்டினர். இதுகுறித்து முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், கடை ஏலத்தில் முறைகேடுகள் நடைபெறாமல் நியாயமான முறையில் கடைகளை ஏலம்விட வேண்டும் எனத் தெரி வித்திருந்தார்.

இந்நிலையில் காந்தி மார்க்கெட் கடைகள் ஏலம் விடப்பட்டதில் அதிமுகவினர் பங்கேற்க அனு மதிக்கப்படவில்லை எனக் கூறி திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் சிவசுப்பிரமணியத்திடம் அதிமுகவினர் புகார் தெரிவித்தனர். மேலும் ஏலத்தை நிறுத்தி வைக்க கோரினர்.

ஆனால், ஏலத்தை நிறுத்தி வைக்க முடியாது என ஆணை யாளர் கூறினார். அவருடன் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீஸார் அதிமுகவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து ஆணையாளர் அலுவலக அறையில் இருந்து அதிமுகவினர் வெளியேறினர்.

அதன் பின் ஏலம் நடத்தப்பட்டு கடைகள் ஒதுக்கப்பட்டன. ஏலம் எடுத்தவர்களுக்கு விரைவில் உத்தரவு வழங்கப்பட உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in