ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் மழை -  32 கண்மாய், 18 ஊருணிகள் நிரம்பின :

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் மழை - 32 கண்மாய், 18 ஊருணிகள் நிரம்பின :

Published on

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்மழையால் 32 கண்மாய்கள், 18 ஊருணிகள் நிரம்பின.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கீழ் 641 கண்மாய்கள், ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் 1122 சிறுபாசன கண்மாய்கள், 3,897 ஊருணிகள் என மொத்தம் 5,660 நீர் நிலைகள் உள்ளன.

அவற்றில் பொதுப்பணித்துறை யின் கீழ் உள்ள திருவாடானை வட்டம் ஓரியூர் கண்மாய், என்.மங்கலம் கண்மாய் உள்ளிட்ட 31 கண்மாய்கள், ஒரு சிறுபாசன கண்மாய், 18 ஊருணிகள் முழு கொள்ளளவை எட்டின. மேலும், 111 கண்மாய்கள், 43 சிறுபாசனக் கண்மாய்கள், 344 ஊருணிகளில் 75 சதவீதம் நிரம்பின.

இந்நிலையில் ஆட்சியர் சங்கர்லால் குமாவத், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை வட்டங்களில் வயல்களில் மழைநீர் சூழ்ந்த கிளியூர், மங் களக்குடி, அஞ்சுக்கோட்டை, கோடானூருக்கு சென்று பார் வையிட்டு தற்காலிக வடிகால் அமைத்து தேங்கிய நீரை கண்மாய்கள், ஊருணிகளில் சேமிக்க உத்தரவிட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in