 நாராயணி நர்சிங் கல்லூரியில் : முதலாம் ஆண்டு தொடக்க விழா :

வேலூர்  நாராயணி நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்க விழாவில் தீபமேற்றி உறுதிமொழி ஏற்றுக்கொண்ட மாணவிகள்.
வேலூர்  நாராயணி நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்க விழாவில் தீபமேற்றி உறுதிமொழி ஏற்றுக்கொண்ட மாணவிகள்.
Updated on
1 min read

வேலூர் புரம்  நாராயணி நர்சிங் கல்லூரியில்முதலாம் ஆண்டு பிஎஸ்சி நர்சிங் மற்றும் டிப்ளமோ நர்சிங் சேர்ந்துள்ள மாணவர்களுக்கான உறுதிமொழி ஏற்பு மற்றும் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு,  நாராயணி மருத்துவமனையின் இயக்குநர் பாலாஜி தலைமை வகித்து பேசும்போது, ‘‘நர்சிங் மாணவிகள் பிற மாணவர்களை விட தனித்துவம் வாய்ந்தவர்கள். நர்சிங் என்பது ஒரு அர்ப்பணிப்பு பணியாகும். கரோனா காலத்தில் பல உயிர்களை காப்பாற்றிய பெருமை டாக்டர்கள் மற்றும் நர்சுகளை சாரும்’’ என்றார். இதில், சிறப்பு விருந்தினராக வேலூர் மாவட்ட மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் கண்ணகி பங்கேற்று பேசும்போது, ‘‘நர்சிங் கல்வியை நன்றாக பயின்றால் தான் நோயாளிகளுக்கு சேவை செய்ய உதவும். சிறந்த முறையில் பணியாற்றி வாழ்வில் முன்னேற வேண்டும்’’ என்றார். இறுதியாக மாணவிகள் தீபமேற்றி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in