வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் - பாதிக்கப்பட்ட குடும்பங்கள் 4 சிறப்பு முகாம்களில் தங்க வைப்பு : வெள்ள பாதிப்புகளை கண்காணிப்பு அலுவலர்கள் ஆய்வு

பாலாறு அணைக்கட்டில் இருந்து வெள்ள நீர் செல்வதை கண்காணிப்பு அலுவலர் செல்வராஜ் நேற்று ஆய்வு செய்தார். அருகில், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர்.அடுத்த படம்: வேலூரில் மழை வெள்ளம் சூழ்ந்த கன்சால்பேட்டை பகுதியில் ஆய்வு செய்த மழை வெள்ள கண்காணிப்பு அலுவலர் நந்தகுமார். அருகில், மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உள்ளிட்டோர்.

Updated on
1 min read

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் 4 சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், மழை வெள்ள பாதிப்புகள் குறித்து மாவட்டங்களில் வெள்ள கண்காணிப்பு அலுவலர்கள் நேரில்ஆய்வு செய்ததுடன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையால் பரவலான மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி குடியாத்தம் 19.2, காட்பாடி 16.8, மேல் ஆலத்தூர் 17.4, பொன்னை 17.1, வேலூர் 20.2, அம்முண்டி 21.62, அரக்கோணம் 38, ஆற்காடு 19.8, காவேரிப்பாக்கம் 34, வாலாஜா 26.8, அம்மூர் 15, சோளிங்கர் 34.2, கலவை 30.7 மி.மீ மழை பதிவாகியிருந்தன.

வேலூர்,ராணிப்பேட்டை மாவட் டங்களில் பொதுப்பணி, வருவாய், காவல், தீயணைப்பு துறை அடங்கிய கட்டுப்பாட்டு அறையை 1077 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மழை பாதிப்பால் வேலூர் மாவட்டத்தில் 2 முகாம்களில் 44 பேரும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2 முகாம்களில் 98 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், போர்வை உள்ளிட்ட வசதிகளை வருவாய்த்துறையினர் ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.

மழை சேத பாதிப்புகள்

நீர் நிலைகள் நிலவரம்

சிறப்பு அலுவலர்கள் ஆய்வு

வேலூர் மாவட்டத்தில் மாநகராட்சிக்கு உட்பட்ட கன்சால் பேட்டை உள்ளிட்ட மழை நீர் தேங்கும் இடங்களை மாவட்ட வெள்ள கண்காணிப்பு அலுவலர் நந்தகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். இதனை தொடர்ந்து, ஆட்சியர் அலுவலகத்தில் கண்காணிப்பு அலுவலர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in