செங்கை மாவட்டத்தில் தயார் நிலையில் - தேசிய பேரிடர் மீட்பு படையினர் :

செங்கை மாவட்டத்தில் தயார் நிலையில்  -  தேசிய பேரிடர் மீட்பு படையினர் :
Updated on
1 min read

அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்பு படைத் தளத்தில் இருந்து 2 குழுவில் 67 பேர் செங்கல்பட்டு மாவட்டத்துக்கு வருகை தந்துள்ளனர். இதில் ஒரு குழுவினர் யோகேஷ் குமார் தலைமையில் மாமல்லபுரம், பூஞ்சேரியில் தங்கி மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மற்றொரு குழுவினர் உதவி ஆணையர் முகம்மது அஸ்லாம் தலைமையில் தாம்பரம் மற்றும் பெரும்பாக்கத்தில் தங்கி மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல் கட்டமாக இவர்கள் மழையால் அதிகம் பாதிக்கப்படக் கூடிய இடங்களை ஆய்வு செய்து, அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மழை எவ்வளவு வந்தாலும் அதை சமாளிக்கும் வகையில் தயார் நிலையில் இருப்பதாக தேசிய பேரிடர் மீட்பு படைக் குழுவினர் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in