மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் - நவம்பர் 12-ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் :

மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில்  -  நவம்பர் 12-ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் :
Updated on
1 min read

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் ந.மகாலெட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நவ.12-ம் தேதி வெள்ளிக் கிழமை நடைபெற உள்ளது. இம்முகாமில் தனியார் முன் னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு கல்வித்தகுதிக்கேற்ப வேலை நாடும் இளைஞர்களை தேர்வு செய்யவுள்ளனர். இம் முகாமில் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை முடித்த வேலைநாடுநர்கள் ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்த வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு தங்களது தகுதிக்கேற்ப தனியார்துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுக்கொள்ளலாம். வேலைநாடுநர்கள் மற்றும் வேலையளிக்கும் நிறுவனங்கள் https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுயவிவரங்களைப் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.

இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்துடன் நவ.12 (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு மதுரை கோ.புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in