சோலைமலை : சூரசம்ஹாரம் நேரடி ஒளிபரப்பு :

சோலைமலை  : சூரசம்ஹாரம் நேரடி ஒளிபரப்பு :
Updated on
1 min read

மதுரை அழகர்கோவில் உதவி ஆணையர் தி.அனிதா வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அழகர்கோவில் சோலை மலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவின் 6-ம் நாளான இன்று (நவ.9) சூரசம்ஹார விழா பிற்பகல் 4.30 மணி முதல் 6 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லை.

நாளை (நவ.10) காலை 9 முதல் 10 மணி வரை திருக்கல்யாண வைபவம் நடைபெறவுள்ளது. அப்போது காலை 10,30 மணிக்குப் பின் சஷ்டி மண்டபத்தில் சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

சூரசம்ஹாரம், திருக்கல் யாண வைபவம் ஆகியவை www.tnhrce.gov.in, www.solaimalaimurugan.org, Arulmigu Kallalagar Thirukkoil Alagarkovil youtube temple live streaming மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். பக்தர்கள் வீட்டிலிருந்தபடியே தரிசனம் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in