Published : 09 Nov 2021 03:10 AM
Last Updated : 09 Nov 2021 03:10 AM

வைகை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவர் சடலம் மீட்பு :

பரவை அருகே வைகை ஆற்றில் குளித்தபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாண வரின் உடல் 3 நாட்களுக்குப் பின் மீட்கப்பட்டது.

திருப்பூரைச் சேர்ந்த கண்ணன் மகன் விஸ்வநாதன் (21). சி.ஏ. படித்தார். சிவகுமார் மகன் அருண் வசந்த் (18). பிளஸ் 2 மாணவர். இருவரும் பரவையில் நடந்த கோயில் திருவிழாவில் பங்கேற்க வந்தனர். பின்னர் இருவரும், விளாங்குடியைச் சேர்ந்த சரவணகுமாருடன் (19) சேர்ந்து பரவை - துவரிமான் வைகை ஆற்றில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு குளித்தனர். அப்போது விஸ்வநாதனும், அருண்வசந்தும் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இருவரையும் தல்லாகுளம், திடீர் நகர், சோழவந்தான் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் இளைஞர்கள் உட்பட 53 பேர் கடந்த 3 நாட்களாக தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று தீயணைப்பு வீரர்களுடன் பேரிடர் மீட்புக் குழுவினரும் இணைந்து 2 படகுகளில் தேடும் பணியில் ஈடுபட்டனர். கோச்சடை அருகே முட்புதருக்குள் சிக்கியிருந்த அருண் வசந்தின் உடலை நேற்று மாலை 4 மணியளவில் மீட்டனர். விஸ்வநாதனை தொடர்ந்து தேடி வருகின்றனர். இப்பணியை எஸ்.பி பாஸ்கரன், துணை கண்காணிப்பாளர் பாலசுந்தரம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x