Published : 09 Nov 2021 03:11 AM
Last Updated : 09 Nov 2021 03:11 AM

நெல்லை- திருச்செந்தூருக்கு விரைவு சிறப்பு ரயில் : நாளை முதல் இயக்கம்

திருநெல்வேலி

தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரை ரயில்வே கோட்டத்தில் குறிப்பிட்ட இடங்களுக்கு விரைவு சிறப்பு ரயில்கள் நாளை (10-ம் தேதி முதல்) இயக்கப்படவுள்ளது. இந்த ரயில்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.

திருநெல்வேலி- தூத்துக்குடி விரைவு சிறப்பு ரயில் (எண் 06668) திருநெல்வேலியிலிருந்து காலை 7.35 மணிக்கு புறப்பட்டு காலை 9.25 மணிக்கு தூத்துக்குடி சென்று சேரும். மறுமார்க்கத்தில் (எண் 06667) தூத்துக்குடி - திருநெல்வேலி சிறப்பு விரைவு ரயில் தூத்துக்குடியிலிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 8.15 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும்.

திருநெல்வேலி- செங்கோட்டை சிறப்பு விரைவு ரயில் (எண் 06685) திருநெல்வேலியிலிருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு காலை 9.15 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும். மறுமார்க்கத்தில் (எண் 06686) செங்கோட்டை - திருநெல்வேலி சிறப்பு விரைவு ரயில் செங்கோட்டையிலிருந்து மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு இரவு 8.10 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.

திருநெல்வேலி - திருச்செந்தூர் சிறப்பு விரைவு ரயில் ( எண் 06673) திருநெல்வேலியிலிருந்து காலை 7.20 மணிக்கு புறப்பட்டு, காலை 9.05 மணிக்கு திருச்செந்தூர் சென்று சேரும். மறுமார்க்கத்தில் ( எண் 06678) திருச்செந்தூர் - திருநெல்வேலி விரைவு சிறப்பு ரயில் திருச்செந்தூரிலிருந்து மாலை 6.05 மணிக்கு புறப்பட்டு இரவு 7.40 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x