சிதம்பரத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறும் மையத்தினை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் கா.பாலசந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம்.

சிதம்பரத்தில் ஐடிஐ பதவிகளுக்கு போட்டித்தேர்வு : டிஎன்பிஎஸ்சி தலைவர் ஆய்வு

Published on

சிதம்பரத்தில் அரசு தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறும் மையத்தினை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் முதல்வர் மற்றும் உதவி இயக்குநர் பதவிகளுக்கு போட்டித் தேர்வு நேற்று நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்டத்திற்கு சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல் நிலை பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. இதற்கு 156 நபர்கள் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பம் செய்திருந்தனர். இத் தேர்வில் 67 நபர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த நிலையில் இத்தேர்வு மையத்தினை தமிழ்நாடு அரசுப் பணியா ளர் தேர்வாணையம் தலைவர் கா.பாலசந்திரன், மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் முன்னி லையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கூடுதல் ஆட்சியர் (வருவாய்) ரஞ்ஜீத்சிங், சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in