நெல்லையில் அமைச்சர் ஆய்வு :

பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகரில் உள்ள  கால்வாயை தூர்வாருவது தொடர்பாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டார்.  படம்: மு.லெட்சுமி அருண்
பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகரில் உள்ள கால்வாயை தூர்வாருவது தொடர்பாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டார். படம்: மு.லெட்சுமி அருண்
Updated on
1 min read

திருநெல்வேலி டவுன் நயினார்குளம் சாலை சீரமைப்புப் பணி, பாளையங்கோட்டை, சக்தி நகரில் வெட்டுவான்குளம் தூர்வாருதல், கால்வாய் சீரமைப்புப் பணி, பாளையங் கோட்டை மனகாவலம்பிள்ளை நகரில் கால்வாய் தூர்வாருதல், பாளையங்கோட்டை பெருமாள் புரத்தில் பேருந்து நிலையம் சீரமைப்புப் பணி போன்றவற்றை தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

திருநெல்வேலியில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வெள்ளம் வந்தால் சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மழைக் காலத்தில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. மீட்புப் பணிக்கு அரசு தயார் நிலையில் உள்ளது.

தீபாவளி பண்டிகை முடிந்து மக்கள் ஊர் திரும்புவதற் காக 17,710 பேருந்துகள் இயக்கப் படுகின்றன. கூடுதல் கட்டணம் வசூல் சம்பந்தமாக ஆம்னி பேருந்துகளில் சோதனை நடத்தப் பட்டு வருகிறது.

7 பேருந்துகளுக்கு அபராதம் விதித்து, பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றார்.

ஆட்சியர் விஷ்ணு, அப்துல் வகாப் எம்எல்ஏ, சட்டப்பேரவை முன்னாள் தலைவர் ஆவுடையப் பன் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in