தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையால் - உதகையில் திரண்ட சுற்றுலா பயணிகள் :

தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையால்  -  உதகையில் திரண்ட சுற்றுலா பயணிகள் :
Updated on
1 min read

தீபாவளி பண்டிகையையொட்டி பள்ளி, கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டதால், தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் உதகையில் திரண்டனர்.

படகு இல்லம், தாவரவியல் பூங்கா, ரோஜாபூங்கா, ஷூட்டிங் மட்டம், பைக்காரா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களில் வழக்கத்தைவிட நேற்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது.மிதி படகு, துடுப்புப் படகு, மோட்டார் படகுகளில் சவாரிசெய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர். அங்கு ஏரியின் நடுவே செயற்கை நீர்வீழ்ச்சியை பார்த்து ரசித்தனர்.

காட்சி மாடங்களில் நின்றபடி ஏரியின் இயற்கை அழகை பார்வையிட்டனர். அங்கு அலங்காரச் செடிகளால் அமைக்கப்பட்ட ‘செல்பி ஸ்பாட்’ முன்பு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். கடந்த 3-ந் தேதி 3,394 பேரும், 4-ம் தேதி 9,736 பேரும், நேற்று முன்தினம் 10,620 பேரும் உதகை அரசு தாவரவியல் பூங்காவை கண்டு ரசித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in