சீர்மரபினர் வாரியத்தில் உறுப்பினராக  பதிவு செய்ய அழைப்பு :

சீர்மரபினர் வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய அழைப்பு :

Published on

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், சீர்மரபினர் வாரியத் தில் உறுப்பினராக பதிவு செய்ய அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசிக்கும் சீர்மரபினர், தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்து கொள்ளலாம். சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த, 18 வயது முடிவடைந்த, 60 வயது முடிவடையாத ஒவ்வொருவரும் சீர்மரபினர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய தகுதி பெற்றவர்ஆவர்.

இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு விபத்து, ஊனம், மரணம், கல்வி, திருமணம், மகப்பேறு, முதியோர் ஓய்வுத்தொகை, ஈமச் சடங்கு செலவு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. நலத்திட்ட உதவிகளைப் பெற, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை (அறை எண்:11) அணுகி விண்ணப்பத்தினை பெற்று பயனடையலாம்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in