Published : 04 Nov 2021 03:12 AM
Last Updated : 04 Nov 2021 03:12 AM

தகுதி வாய்ந்த இளைஞர்களுக்கு வாய்ப்பில்லா சூழல் - ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு பல லட்சம் ஊதியத்தில் பணி : புதுவை ஆளுநரிடம் புகார்

புதுச்சேரி அரசு துறைகளில் பணி ஓய்வு பெற்ற அதிகாரிகளை மீண்டும் பலவேறு துறைகளில் ஆலோசகர், அலுவலக அதிகாரி சிறப்பு பணி, ‘ஸ்பெஷலிஸ்ட்’ என நியமனம் செய்து பல லட்சம் ஊதியமாக பல்வேறு துறைகளில் தருகின்றனர். ஆனால் இதுபற்றி விசாரித்தால் அரசு துறைகளில் சரியான தகவலை தருவதில்லை. பல துறைகளில் ஓய்வு பெற்ற அதிகாரிகள் பலரும் இவ்வாறு பணியில் உள்ளனர்.

இதுபற்றி ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்புதலைவர் ரகுபதி இதுபற்றி கூறிய தாவது:

சுகாதாரத்துறை இயக்குநர் ராமன் ஓய்வு பெற்ற பிறகு ‘ஸ்பெஷலிஸ்ட்’ என்று மார்பகமருத்துவமனையில் நியமிக்கப் பட்டார். கடந்த 22.11.2019-ல் ஆர்டிஐமூலம் தகவலாக கேட்டதற்கு அவர்கள் தகவல் தரவில்லை. 24.12.2019 அன்று முதல் மேல்முறை யீட்டு மனு அளிக்கப்பட்டது. அவர்களும் இதுசம்மந்தமான தகவல் பெற்று தராததால் மத்திய தகவல் ஆணையத்தில் முறையீடு செய்ததின் பேரில் 22.09.2021 அன்று இதுகுறித்து விசாரணை செய்து மத்திய தகவல் ஆணையம் தகவல் அளிக்க உத்தரவிட்டதின் பேரில் 2 ஆண்டுகள் கழித்து அளித்து தகவல் அளித்துள்ளனர். ஓய்வு பெற்ற டாக்டர் ராமனுக்கு ரூ. 2.86 லட்சம் ரூபாய் மாத ஊதியம் அளிப்பதாக தகவல் அளித்துள்ளனர்.

கோரிமேடு மார்பக நோய் மருத்துவமனையில் ஏற்கெனவே ஒரு ‘ஸ்பெஷலிஸ்ட்’, ஒரு தலைமை மருத்துவ அதிகாரி, 3 தலைமை நர்சிங் அதிகாரிகள், 22 நர்சிங் அதிகாரிகள் என 107 பேர் பணிபுரிகிறார்கள். அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 6.96 கோடி ஊதியம் தரப்படுகிறது. அதேநேரத்தில் மார்பக நோய் மருத்துவமனையில் உள்நோயாளிகள் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

அதிகமான ஊழியர்களை பணிக்கு தேவைப்படும் இதர அரசுமருத்துவமனைகளுக்கு மாற்ற லாம் என கடந்த 2019 ஜனவரியில் மனு தரப்பட்டுள்ளது. அதன் பிறகுபணிஓய்வு பெற்ற துறை அதிகா ரியை ‘ஸ்பெஷலிஸ்ட்’ என்று கடந்த2019ல் ரூ. 2.8 லட்சம் மாத ஊதியத்தில் நியமித்துள்ளது மூலம் ரூ. 71.47லட்சம் அரசு நிதி செலவிடப் பட்டுள்ளது. இதுபோல் பலரும் பணியில் உள்ளதாக தெரிகிறது.புதுச்சேரி அரசு ஓய்வு பெற்றஅனைத்து உயர் அதிகாரிகளுக்கும் இதுபோன்ற பணிகள் வழங்கி லட்சக்கணக்கில் ஊதியம் அளித்துவருகின்றனர். அரசின் இதுபோன்றதவறான செயலால் பல தகுதி வாய்ந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பாதிக்கப்படுவதோடு, புதுச்சேரியில் இளைஞர்களின் வேலைவாய்பின்மைக்கு இதுபோன்ற செயலும் ஒரு காரணமாகும். இது போல் பணிஓய்வு பெற்றவர்களை பணி அமர்த்தக்கூடாது. தகுதி வாய்ந்தோருக்கு வாய்ப்பு தரவேண்டும் என்று ஆளுநரிடம் மனுதரப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x