திருச்செந்தூர் அருகே இலங்கைக்கு  கடத்த முயன்ற 2 டன் மஞ்சள் பறிமுதல் :

திருச்செந்தூர் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 2 டன் மஞ்சள் பறிமுதல் :

Published on

திருச்செந்தூர் அருகே காயல்பட்டினம் கடற்கரை வழியாக இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படுவதாக திருச்செந்தூர் கடலோர பாதுகாப்பு குழும போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. கடலோர பாதுகாப்பு குழும உதவி ஆய்வாளர் கோமதி நாயகம் தலைமையிலான போலீஸார் காயல்பட்டினம் கடற்கரையில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்ற மினி வேனை சோதனை செய்தனர். அதில் 69 மூட்டைகளில் சுமார் 2 டன் எடையுள்ள மஞ்சள் இருந்தது. மஞ்சளை பறிமுதல் செய்த போலீஸார், காயல்பட்டினம் லட்சுமிபுரத்தைச் சேர்ந்த சித்திரைபாண்டி (26) என்பவரை கைது செய்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in