இளைஞரிடம் ரூ.9.50 லட்சம் மோசடி தெற்கு சிலுக்கன்பட்டி நபர் கைது :

இளைஞரிடம் ரூ.9.50 லட்சம் மோசடி தெற்கு சிலுக்கன்பட்டி நபர் கைது :
Updated on
1 min read

தூத்துக்குடி அருகே யுள்ள நடுச்செக்காரக்குடி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பெருமாள்(36). முதுநிலை பட்டதாரியான இவர், பால் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு தெற்கு சிலுக்கன்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்த முத்துக்குமார் (31) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

முத்துக்குமார் தூத்துக்குடி துறைமுகத்தில் மத்திய அரசு வேலை வாங்கித் தருகிறேன் என்று, பெருமாளிடம் கூறியுள்ளார். இதனை நம்பிய பெருமாள் 12.12.2020 முதல் 25.02.2021 வரை ரொக்கமாக ரூ.3.50 லட்சம், வங்கி கணக்கு மூலம் ரூ.6 லட்சம் என, மொத்தம் ரூ.9.50 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் முத்துக்குமார், தான் கூறியபடி பெருமாளுக்கு வேலை வாங்கி கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, பெருமாள் தனது பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். பணத்தை கொடுக்காததால் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் புகார் அளித்தார். மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி (பொ) சம்பத் மேற்பார்வையில் ஆய்வாளர் வனிதா ராணி தலைமையில் போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர் முத்துக்குமாரை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in