Published : 04 Nov 2021 03:14 AM
Last Updated : 04 Nov 2021 03:14 AM
திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிய மின்னனு குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பிப்பவர்கள் உரிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரி வித்துள்ளார்.
கரோனா பெருந்தொற்றால் பொதுமக்கள் வருவாய் இன்றி அவதிப்பட்டதால் ஒவ்வொரு குடும்ப அட்டை தாரர்களுக்கும் ரூ.4 ஆயிரம் நிவாரணத்தொகையாக வழங்கப்படும் என திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அறிவித்தது.
அதன்படி, குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 தவணையாக ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டது. இதில், திருப் பத்தூர் மாவட்டம் கரோனா நிவாரண தொகை வழங்கியதில் மாநிலத்திலேயே முதலிடம் பிடித் துள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா கூறியதாவது, ‘‘தமிழகத்தில் கரோனா தொற்றால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட சிரமங்களை குறைக்க தமிழக அரசு 14 வகையான மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கியது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 13 ஆயிரத்து 57 குடும்ப அட்டைதாரர்களில் 3 லட்சத்து 12 ஆயிரத்து 851 குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகையான மளிகை தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மீதமிருந்த மளிகை பொருட்கள் அடங்கிய 206 தொகுப்புகள், அரசு காப்பகங்கள், முதியோர் இல்லங்களில் தங்கியிருந்தவர் களில் தலா ஒன்று வீதம் 206 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் புதிய மின்னனு குடும்ப அட்டை கேட்டு அதிகம் பேர் விண்ணப்பம் வழங்கி வருகின்றனர். புதிய மின்னனு குடும்ப அட்டை கேட்டு அளிக்கப்படும் விண்ணப் பங்களுடன் போதுமான ஆவணங் களையும் பொதுமக்கள் சேர்த்து வழங்க வேண்டும்.
மின்னனு குடும்ப அட்டை வேண்டுவோர்கள் அவர்களது குடும்பத்தில் உள்ள அனைத்து நபர்களும் தங்களது ஆதார் அட்டையை பதிவேற்றம் செய்ய வேண்டும். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் அட்டை இல்லையென்றால் அந்த குழந்தைகளின் பிறப்பு சான்று பதிவேற்றம் செய்ய வேண்டும்.
குடும்ப தலைவர் புகைப்படம் இணைக்க வேண்டும். இருப்பிடங் களுக்கான ஆதாரங்கள் இணைக்கப்பட வேண்டும். இது போன்ற ஆவணங்கள் இணைக்கப்பட்டிருந்தால் தகவல் பெறப்பட்ட 15 நாட்களுக்கு பின்பு அலுவலக நாளில் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலரிடம் அவற்றை காண்பித்து புதிய மின்னனு குடும்ப அட்டையை பெற்றுக்கொள்ளலாம்.
எனவே, குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பிக்கும் பொதுமக்கள் மேற்கண்ட விதிமுறைகளை பின்பற்றி விண்ணப்பங்களை வழங்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் புதிய மின்னனு குடும்ப அட்டை கேட்டு அதிகம் பேர் விண்ணப்பம் வழங்கி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT