உளுந்தூர்பேட்டையில் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.10 லட்சம் பட்டாசுகள் பறிமுதல் :

உளுந்தூர்பேட்டையில் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.10 லட்சம் பட்டாசுகள் பறிமுதல் :
Updated on
1 min read

உளுந்தூர்பேட்டையில் பட்டாசு விற்பனைக்கான உரிமம் பெற்று, அளவுக்கு அதிகமான பட்டாசுகளை வீட்டில் பதுக்கி வைத் திருப்பதாக உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் கோபால கிருஷ்ணனுக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து வருவாய் துறையினர் மற்றும் உளுந்தூர்பேட்டை போலீஸார் நேற்று ஆண்டாள் மற்றும் சாமி ஆகியோரது வீடுகளில் சோதனையிட்டனர்.அப்போது அவர்களது வீடுகளில் 1,500 பட்டாசு பெட்டிகள், நாட்டு வெடிகள் என அளவுக்கு அதிகமான பட்டாசுகளை பதுக்கி வைத்திருப்பது தெரியவந் துள்ளது. இதையடுத்து இருவரின் வீடுகளில் இருந்த பட்டாசுகளை போலீஸார் பறிமுதல் செய்து அவற்றை வருவாய் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக இருவரிடமும் விசாரணை நடத்தினர்.

பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசுகளின் மதிப்பு ரூ.10 லட்சம் எனக் கணக்கிடப்பட்டதாக வருவாய் துறையினர் தெரிவித் துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in