மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டு வைத்திருந்த கிருஷ்ணகிரி மாற்றுத்திறனாளிக்கு பண உதவி :

மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டு வைத்திருந்த  கிருஷ்ணகிரி மாற்றுத்திறனாளிக்கு பண உதவி :
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சின்னக் கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த பார்வை குறைபாடு உடைய மாற்றுத் திறனாளி சின்னக்கண்ணு (65). இவர் கடந்த 18-ம் தேதி மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.1000, 500 நோட்டுக்கள் என மொத்தம் ரூ.65 ஆயிரத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார்.

மதிப்பிழப்பு செய்யப் பட்டது தனக்கு தெரிய வில்லை எனவும், இந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றித் தர வேண்டும் எனவும் ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தார். இது தொடர்பாக வங்கி மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இதனையறிந்த சென்னை தி நகரைச் சேர்ந்த 70 வயது முதியவர், மாற்றுத்திறனாளிக்கு உதவிட ரூ.65 ஆயிரத்தை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்தார். அதன்படி, ரூ.65 ஆயிரத்துக்கான காசோலையை சின்னகண்ணுவிடம், மாவட்ட ஆட்சியர் ஜெயசந்தி ரபானு ரெட்டிநேற்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வழங்கினார். அப் போது, சின்னகண்ணு அஞ்சல் நிலையத்தில் கணக்கு வைத்துள்ளதாகவும், அதிலோ அல்லது வங்கி மூலம் புதுக் கணக்கு தொடங்கி காசோலை போடப்படும் எனவும், அவருக்கு தேவைப்படும் போது பணம் எடுத்துக்கொள்ளும்படி உதவிகளும் செய்யப்படும் என ஆட்சியர்தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது டிஆர்ஓ., ராஜேஸ்வரி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முருகன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் பாக்கியலட்சுமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in