கோமுகி அணைக்கு வரும் நீர் வெளியேற்றம் :

கோமுகி அணைக்கு வரும் நீர் வெளியேற்றம் :
Updated on
1 min read

மழை காரணமாக கோமுகி அணைக்கு வரும் வரத்து நீர் வெளியேற்றப்படுகிறது.

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று காலை முதல் மிதமான மழை பெய்தது. மாவட்டத்தில் நேற்று சராசரியாக 8 மி.மீ மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக மூங்கில்துறைப்பட்டில் 11 மிமீ மழை பதிவாகியுள்ளது. மிதமான மழை பெய்துவரும் நிலையில், தீபாவளிப் பண்டிகைக்கான பொருட்கள் வாங்க மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலை உள்ளது.

கள்ளக்குறிச்சியை அடுத்த கல்வராயன்மலை அடிவாரத்தில் 1,000 ஏக்கர் பரப்பளவில் 46 அடி வரை நீரை தேக்கி வைக்கும் திறன்கொண்ட கோமுகி அணைக்கு,மழையின் காரணமாக நேற்று 177 கன அடி நீர் வரத்து இருந்தது. தற்போது அணையில் 44.4 அடி வரை நீர் தேங்கியிருக்கும் நிலையில், வரத்து தண்ணீரை அப்படியே வெளியேற்றி வருகின்றனர் நீர்வள ஆதாரத்துறையினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in