Published : 01 Nov 2021 03:08 AM
Last Updated : 01 Nov 2021 03:08 AM
தி.மலை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத் தேர்தல் நடைபெற்றது.
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில தலைவர், மாநில துணைத் தலைவர் மற்றும் இரண்டு மாநில செயலாளர்கள் என மொத்தம் 4 பதவிகளுக்கு, மாநிலம் முழுவதும் நேற்று தேர்தல் நடைபெற்றது. மாநிலத் தலைவர் பதவிக்கு நாகப்பட்டினம் ராஜேந்திரன், செங்கல்பட்டு ஜானகிராமன், மாநில துணைத் தலைவர் பதவிக்கு கிருஷ்ணகிரி நல்லா கவுண்டன், திருவள்ளூர் ரகுவரன், 2 மாநில செயலாளர்கள் பதவிக்கு காஞ்சிபுரம் தியாகராஜன், கடலூர் விஸ்வநாதன், புதுக்கோட்டை வீரபாண்டியன், திருப்பத்தூர் சர்தார் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.
இதையொட்டி, திருவண்ணா மலை மாவட்டத்தில் தி.மலை, ஆரணி மற்றும் செய்யாறு ஆகிய 3 இடங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தல் பார்வை யாளர்களாக சுந்தரேசன், நிசார், அனீஸ்குமார், பாண்டியன், பால்பாண்டி, தேசிங்கு ஆகியோர் செயல்பட்டனர். அவர்களில், ஆரணி கோட்டத்தில் 147 உறுப்பினர்களும், தி.மலை கோட்டத்தில் 150 உறுப்பினர்களும், செய்யாறு கோட்டத்தில் 272 உறுப்பினர்களும் என மாவட்டத்தில் மொத்தம் 569 உறுப்பினர்கள் நேற்று வாக்களித் தனர்.
திருப்பத்தூர்
மண்டல தேர்தல் நடத்தும் அலுவலர் மகேஷ் தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலர்களாக ரவி மற்றும் குப்த பிரவர்தனன் ஆகியோர் நியமிக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT