Published : 01 Nov 2021 03:08 AM
Last Updated : 01 Nov 2021 03:08 AM

தடை செய்யப்பட்ட பட்டாசு ரகங்களை விற்றால் - வியாபாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை : திருப்பத்தூர் மாவட்ட வருவாய் அலுவலர் எச்சரிக்கை

திருப்பத்துார் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பட்டாசு கடைகளை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் மாவட்ட அலுவலர் ஆர்னிஷா பிரியதர்ஷினி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பத்தூர்

இந்தியாவில் தடை செய்யப்பட்ட பட்டாசு ரகங்களை உற்பத்தி செய் தாலோ, தீபாவளி பண்டிகை முன்னிட்டு அத்தகைய பட்டாசு களை விற்பனை செய்வது தெரியவந்தாலோ கடை உரிமை யாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பத்தூர் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யாபாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் நவம்பர் 4-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண் டாட பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், தீபாவளி பண்டிகை முன்னிட்டு நகர் மற்றும் கிராமப்பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடைகள் ஆங் காங்கே தொடங்கப்பட்டுள்ளன.

இதில், ஒரு சில பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள தற்காலிக பட்டாசு கடைகளில் இந்தியாவில் தடை செய்யப்பட்ட பட்டாசு ரகங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்டத்தில் தீயணைப்புத்துறை மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் மாவட்ட அலுவலர் ஆர்னிஷா பிரியதர்ஷினி தலைமையிலான தீயணைப்பு அலுவலர்கள் பல் வேறு கடைகளில் நேற்று திடீர் ஆய்வு நடத்தினர்.

அப்போது, திருப்பத்தூர் நகரப்பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகளில் தடை செய்யப்பட்ட பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகிறதா என்றும், பாதுகாப்பு உபகரணங்கள் கடைகளில் வைக்கப்பட்டுள்ளதா ? என்பதை அவர் ஆய்வு செய்தார். இந்தியாவில் தடைசெய்யப்பட்ட பட்டாசு ரகங்களை விற்பனை செய்வது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்தார். இந்த ஆய்வின் போது, தீயணைப்புத் துறை மாவட்ட உதவி அலுவலர் பழனி, திருப்பத்தூர் நிலைய அலு வலர் அசோகன் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்நிலையில், தடை செய்யப் பட்ட பட்டாசு ரகங்களை விற்பனை செய்தால், கடை உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதுடன் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என டிஆர்ஓ தங்கைய்யாபாண்டின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘இந்தி யாவில் தடைசெய்யப்பட்ட ரசாய னம் கலந்த பட்டாசு வகைகளை உற்பத்தி செய்யவும், அவற்றை பயன்படுத்த தடை விதிக்கப் பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் பட்டாசு கடைகளில் தடைசெய்யப் பட்ட பட்டாசுகளை விற்பனை செய்வதை வியாபாரிகள் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் பாது காப்புடன் தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டும். மேலும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தொடர்ந்து, கண்காணிப்பில் ஈடுபட அறி வுறுத்தப்பட்டுள்ளனர். உச்ச நீதிமன்ற உத்தரவினை மீறி தடைசெய்யப்பட்ட பட்டாசுகள் கண்டறி யப்பட்டால் சம்பந்தப்பட்ட பட்டாசு கடை உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப் பதுடன், கடைக்கான உரிமங்கள் ரத்து செய்யப்படும்’’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x