போக்குவரத்து நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் :  மா.கம்யூ. மாநாட்டில் வலியுறுத்தல்

போக்குவரத்து நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : மா.கம்யூ. மாநாட்டில் வலியுறுத்தல்

Published on

மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய மாநாடு பல்லடத்தில் நடந்தது. கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர். மதுசூதனன் மாநாட்டை தொடங்கி வைத்தார். ஒன்றிய செயலாளராக ஆர்.பரமசிவம் தேர்வு செய்யப்பட்டார்.

பல்லடம் நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, உரியநடவடிக்கை எடுக்க வேண்டும். பல்லடம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி, விபத்துஅவசர சிகிச்சைப் பிரிவு செயல்படும் மையமாக மாற்ற வேண்டும். பல்லடம் பகுதியில் உரம், பூச்சிமருந்து விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பல்லடம் வட்டத்தில், தொழிற்கல்வி நிலையம் தொடங்க வேண்டும். பல்லடம் அரசுகலைக் கல்லூரியில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

முதுகலை பட்டப்படிப்புகளை தொடங்க வேண்டும். பல்லடம் முதல் அவிநாசி வரையில் 63 வேலம்பாளையம் வழியாக நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும். பல்லடம் சுற்றுவட்டார கிராமங்களில் வீடற்ற ஏழை, எளிய மக்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும். ஆனைமலையாறு- நல்லாறு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in